/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/391_3.jpg)
நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 20ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதன்படி நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளராக கார்த்திக்கு ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்துகூடிய செயற்குழு கூட்டத்தில் வெற்றி பெற்ற அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலராகநடிகர் கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிர்வாக அறங்காவலராகநாசர் தலைமையில் நடிகர் சங்க அறக்கட்டளை செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அறங்காவலர் குழுவின் உறுப்பினராக விஷால், கார்த்தி, பூச்சி முருகன். கோவை சரளா உள்ளிட்டோரும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)