Advertisment

பிரபல நகைச்சுவை நடிகர் காளிதாஸ் காலமானார்!

kalidass

நடிகரும் டப்பிங் கலைஞருமான காளிதாஸ், வடிவேலுவுடன் இணைந்து 'ஜனனம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 1980களில் வெளிவந்த பல படங்களின் வில்லன் நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ள காளிதாஸ், இதுவரை 3,000 படங்களுக்கும் மேலாக டப்பிங் பேசியுள்ளார். சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் படத்திலும் டப்பிங் பேசியிருந்தார்.

Advertisment

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காளிதாஸ், அதற்காகசிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காளிதாஸ் காலமானார். அவருக்கு வயது 65. காளிதாஸின் மனைவி வசந்தா ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில், அவருக்கு விஜய் என்ற மகனும் பார்கவி என்ற மகளும்உள்ளனர். காளிதாஸின் இறுதிச்சடங்கு சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

Advertisment

tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe