Advertisment

பெரியாருக்கு அப்பாவாக நடித்த கைகலா சத்யநாராயணா காலமானார்

  Actor Kaikala Satyanarayana passes away

Advertisment

தெலுங்கில் பிரபலமான நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முகத் தன்மை கொண்ட ஆளுமை கைகலா சத்யநாராயணா வயதுமூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பியவர், மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான இவர்,தமிழில் கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமன்மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமும் பிரபலமும் ஆனவர். சத்யராஜ் நடித்த பெரியார் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe