Skip to main content

‘சன் டிவி வந்தா ஒட்டுமொத்த சினிமாவே அழிஞ்சுரும்’ (வீடியோ)

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

ஜே.கே.ரித்தீஷ், சினிமாவிலும் அரசியலிலும் பரபரப்புக்குப் பெயர் போனவர். நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் தற்போது நடக்கும் பிரச்சனைகள் குறித்த தன் பக்க உண்மைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். விஷாலை எதிர்த்து எதிர்வரும் நடிகர் சங்கத் தேர்தலில் தான் நிற்கப் போகதாகவும் தெரிவித்தார். விஷாலுக்கு லைகாவும் சன் டிவியும் உதவுவதாகப் பல தகவல்களை வெளியிட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘தனுஷ் 50’ - அப்டேட் கொடுத்த படக்குழு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
dhanush 50 first look update

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதை தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனுஷின் 50வது பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இதனை ஒரு போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதில் தனுஷ் மொட்டை கெட்டப்புடன் ரத்தம் ஒழுகிய நிலையில் பின் திரும்பி நிற்கிறார். இதேபோல் தான் இப்பட அறிவிப்பு வெளியான போஸ்டரிலும் இடம் பெற்றிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டைட்டிலோடு தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. 

Next Story

ஜெயிலர் வெற்றி; சன் பிக்சர்ஸ் தொடர் உதவி

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

jailer success sun pictures helped under privileged patients.

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டது.

 

வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளதையடுத்து ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோரை சந்தித்து காசோலை மற்றும் விலையுர்ந்த கார்களை பரிசாக அளித்து மகிழ்ந்தார். 

 

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், 100 ஆதரவற்ற குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடி வழங்கியது. இது சம்மந்தமாக சன் பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதி அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் காசோலையை வழங்கினார். இதையடுத்து தற்போது ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ.60 லட்சம் மதிப்புள்ள காசோலையை டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் செயல் துணைத் தலைவர் டாக்டர்.ஹேமந்த் ராஜாவிடம் காவேரி கலாநிதி வழங்கினார்.