.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111_153.jpg)
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை இயக்குநர் மஹி வீ ராகவ் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னதாகஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை படமாக எடுத்தவர்.
'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளார்இயக்குநர் மஹி வீ ராகவ். இதுஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
'யாத்ரா 2' ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாக முன்பு தகவல் வெளியானது. பின்பு இந்தி நடிகர் பிரதிக் காந்தி நடிப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ஜீவாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆந்திராவில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் பட வேலைகளை தற்போது தொடங்கி உள்ளனர் படக்குழு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)