80 மற்றும் 90களில் நகைச்சுவை உலகில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் ஜனகராஜ். அவர் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். அவருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாக செய்திகள் வெளியாகின. இவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு சாருஹாசன் நடிப்பில் வெளியான 'தாதா 87' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் நடிகர் ஜனகராஜ் தற்போது ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். இதுவரை எந்த சமூகவலைத்தளத்திலும் இல்லாத அவர் இன்று தன் 66வது பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். இதை அவரே தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.