nfndfcndfn

Advertisment

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் தற்போது நடிகர் ஜெய் நடிக்கும் 'சிவ சிவா' படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் சுசீந்திரன், சில மாதங்களுக்கு முன்பு காலையில் நடைப்பயிற்சி சென்றபோது, சிறுவிபத்தில் சிக்கினார். அதற்குப் பிறகு கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால், சொந்த ஊரில் குடும்பத்தினருடன் தங்கினார். அப்போது புதிதாகக் கதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கதைதான் 'சிவ சிவா'. நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிக்கிறார்.

ngjdfm

மேலும், இந்தப் படத்தின் இசையமைப்பாளராக நடிகர் ஜெய் அறிமுகமாகிறார். இதுகுறித்து அவர் பேசியபோது, “ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். எதிர்பாராத விதமாக நடிகரானேன். இருப்பினும், இசையமைப்பாளராக வேண்டும் என்ற எனது 19 வருட கனவு தற்போது நனவாகியுள்ளது” என்றார். மேலும், இப்படத்துக்காக அவர் இசையமைத்துள்ள ‘காட முட்ட’ என்ற பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகிவருகிறது.