/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jai_12.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் ஜெய், கடைசியாக 'கேப்மாரி' படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத்தொடர்ந்துஇயக்குநர் சுசீந்திரன் இயக்கும் 'சிவசிவா' படத்திலும், இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்கும் ‘எண்ணித்துணிக’ படத்திலும்நடித்துவருகிறார்.
நடிகர் ஜெய்க்கு நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்தில் ஆர்வம் அதிகம். இதனால் கார் பந்தயத்தில் அவ்வப்போது கலந்துகொள்ளும்நடிகர்ஜெய் மூன்றாண்டுகளுக்குப் பிறகு எம்ஆர்எஃப் மற்றும் ஜேஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் பார்முலா ஃபோர்பந்தயத்தில் தற்போது பங்கேற்கவுள்ளார். சென்னை மைதானத்தில் நேற்று (10.12.2021) தொடங்கிய இந்தக் கார் பந்தய போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமைவரை நடக்கவுள்ளது. இதில் நம்பர் 6 என்ற எண் கொண்ட காருடன்பந்தயத்தில் நடிகர் ஜெய்களமிறங்கவுள்ளார். இப்போட்டியில் கலந்துகொள்ள ஜெய்க்கு ‘எண்ணித்துணிக’ படக்குழுவினர் ஸ்பான்சர் செய்வது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)