Advertisment

அருண்ராஜா காமராஜுடன் இணையும் ஜெய்

actor jai joined with arunraja kamaraj for web series

Advertisment

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஜெய், கடைசியாக சுந்தர்.சி-யின் 'காஃபி வித் காதல்' படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனைத்தொடர்ந்த தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் ஜெய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸை பிரபல ஓடிடி நிறுவனம் தயாரிப்பதாகவும் சாம் சி.எஸ் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை கடைசியாக உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கமாஸ்டர் மகேந்திரன் நடிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக வெப் சீரிஸில் ஜெய் நடிக்கிறார். முன்னதாக 2020ஆம் ஆண்டு வெளியான 'ட்ரிபில்ஸ்' (Triples)வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

web series arunrajakamaraj jai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe