vnj

Advertisment

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் சில வருடங்களாகவே புற்றுநோய்க்குச்சிகிச்சை எடுத்து வந்த நிலையில்சமீபத்தில் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அவரால் அங்குச் செல்ல முடியவில்லை. இதனால் வீடியோ கால் மூலம் தனது அம்மாவுக்கான மரியாதையைச் செலுத்திய நடிகர் இர்ஃபான் கான் உடல்நிலை நேற்று திடீரென மோசமடைந்ததால் அவர் மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 53 வயதான இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்று நோய் காரணமாக அதிகமாகப் படங்களில் நடிக்காமலிருந்த அவர் பிரிட்டனில் சிகிச்சையிலிருக்கும்போது நடித்த 'அங்க்ரேஸி மீடியம்' திரைப்படம் ஊரடங்குக்கு முன் கடைசியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.