Advertisment

விவாகரத்தால் 7 வருடங்கள் பிரிந்திருந்த பிரபல ஜோடியை சேர்த்து வைத்த கரோனா!

பாலிவுட்டின் பிரபல நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் கடந்த 2000ஆம் ஆண்டு சுஸான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இதனையடுத்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. 2013ஆம் ஆண்டு ஹ்ரித்திக்கிற்கும் அவரது மனைவி சுஸானுக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்துக்கொண்டனர்.

Advertisment

clipboard

இதன்பின் இவர்கள் இருவரும் தனியே தனியேதான் வசித்து வந்தனர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக ஒரே விட்டில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து ஹ்ரித்திக் தனது இன்ஸ்டா பதிவில், “நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது எனது குழந்தைகளிடமிருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று ஒரு அப்பாவாக என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

Advertisment

நிச்சயமற்ற சூழலில், பல மாதங்கள் சமூகத்திடமிருந்து விலகியிருக்க வேண்டும். ஊரடங்கு தொடரும் என்ற சாத்தியங்கள் இருக்கும் வேளையில் உலகம் ஒன்றாக ஒற்றுமையுடன் சேர்ந்து வருவது மனதுக்கு இதமாக இருக்கிறது.

இது எனது அன்பான சுஸான் (என் முன்னாள் மனைவி) புகைப்படம். எங்கள் குழந்தைகள் எங்கள் இருவரிடமிருந்தும் காலவரையின்றி பிரிந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தானே முன் வந்து, தனது வீட்டிலிருந்து தற்காலிகமாக இங்கு வந்திருக்கிறார். இந்த ஆதரவுக்கும், புரிதலுக்கும் நன்றி சுஸான்" என்று தெரிவித்துள்ளார்.

hrithik roshan corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe