தமிழில் முருகா, பிடிச்சிருக்கு, கோழி கூவுது உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தவர் அசோக். வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் இவர் திரைப்படங்களை தவிர்த்து சின்னதிரை சீரியல்களிலும் நடித்து வந்தார். இப்போதும் தொடர்கிறார்.
இந்த நிலையில் ‘மஞ்சு விரட்டு’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இயக்குநர் சங்கிலி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காளை மாடுனான காட்சிகள் படமாக்கப்படும் போது, காளை நடிகர் அசோக்கை லேசாக முட்டித் தள்ளியது. இதில் அவர் சற்று தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர்.
மாடு முட்டியதில் வயிற்று பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்பு மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு அவர் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே காளை அவரை முட்டும் காட்சி சமுக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.