நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவரும் , பழம்பெரும் நடிகருமான ஜி. சீனிவாசன் (வயது 95) காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் ஜி.சீனிவாசன் இன்று (26.06.2025) உயிரிழந்தார். இவர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், மனிதன், ஐயா, வேங்கை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
இந்நிலையில் நாளை (27.06.2025 - வெள்ளிக்கிழமை) மதியம் 01.30 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஏ.வி.எம். மின் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
Advertisment