
தமிழ் திரையுலக நடிகர் ‘என் உயிர் தோழன்’ பாபு மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாபு. இதன் மூலம் மக்கள் மத்தியில் ‘என் உயிர் தோழன்’பாபு என அழைக்கப்பட்டு வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி பாபு காலமானார்.
பாபுவின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர், ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். என் உயிர் தோழன் திரைப்படத்திற்குப் பிறகு விக்ரமனின் பெரும்புள்ளி, கோபி பீம்சிங் இயக்கத்தில் வெளியான தாயம்மா, பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் பாபு ஆவார்.