Actor Divya Prabha reacts to criticism for without dress scene in All We Imagine as Light

மலையாள நடிகைகள் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா மற்றும் இந்தி நடிகை சாயா கதம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light). இப்படத்தை பாயல் கபாடியா இயக்கியிருக்க தாமஸ் ஹக்கீம், ஜூலியன் கிராஃப் இருவரும் தயாரித்துள்ளனர். இந்தப் படம் இந்தாண்டு நடந்த புகழ் பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, கிராண்ட் பிரிக்ஸ்(Grand Prix) என்ற பிரிவில் விருது வென்றது. இந்த விழாவில் பெருமை மிகு விருதாக பார்க்கப்படும் இந்த விருதை முதல் இந்திய படமாக இந்த படம் பெற்று பலரது கவனத்தை ஈர்தது. மேலும் சில சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.

Advertisment

இப்படம் மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. கடந்த 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் நடிகை திவ்யா பிரபா நடித்த ஆபாச காட்சி இணையத்தில் கசிந்தது. மேலும் சில விமர்சனங்களையும் சந்தித்தது. இது குறித்து தற்போது நடிகை திவ்யா பிரபா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போதே கேரளாவில் இருந்த சில அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்தேன்.

Advertisment

கசிந்த வீடியோவை பகிர்ந்து வரும் நபர்கள் வெறும் 10 சதவிகித மக்கள். அவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. படத்துக்கு ஒப்புதல் கொடுத்த மத்திய வாரியக்குழுவில் மலையாளிகளும் இருந்தனர். ஒரு நடிகையாக எனக்கு பிடித்த கதைகளில் நடிக்கிறேன். அந்த வகையில்தான் ஆல் வீ இமேஜின் அஸ் லைட் படத்திலும் எனது கதாபாத்திரம் பிடித்து நடித்தேன். புகழுக்காக நான் ஆபாச காட்சியில் நடித்ததாக சிலர் விமர்சனம் செய்கிறார்கள். நான் பல விருதுகளை வெற்றிருக்கிறேன். அதோடு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஆபாசமாக நடித்துதான் புகழ் பெற வேண்டும் என்ற நிலைமை எனக்கு இல்லை” என்றார்.