Advertisment

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷுக்கு விருது

Actor Dhanush won Best Actor award BRICS Film Festival for asuran movie

சிறந்த படைப்புகள், கலைஞர்கள் எனதிரைத்துறையில் சாதித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாநடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (28.11.2021) நிறைவடைந்தது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து பி.எஸ். வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படமும் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் திரையிடப்பட்டன.

Advertisment

இதையடுத்து, 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் நடத்தப்பட்ட BRICS திரைப்பட விழாவில் ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுதனுஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. மேலும், 2019ஆம்ஆண்டின்சிறந்த படத்திற்கான தேசிய விருது 'அசுரன்'படத்திற்கும், அதில்நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

IFFI 2021 actor dhanush asuran vetrimaran Danush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe