Advertisment

'விடுதலை' படத்திற்காக வெற்றிமாறனுடன் கைகோர்த்த தனுஷ்!

Actor Dhanush has sing song on Vetrimaran movie

இயக்குநர்வெற்றிமாறன் 'அசுரன்' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். படத்தில்பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் படத்தில்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறு கதையைத்தழுவி எடுக்கப்படுகிறது. இளையராஜாஇசையமைக்கும் இப்படத்தை எல்ரெட். குமார் தயாரிக்கிறார். 'விடுதலை' படத்தின் பணிகள் விறுவிறுப்பாகநடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான 'விடுதலை' படத்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் 'விடுதலை' படத்தின் பாடல் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், இயக்குநர் வெற்றிமாறன்அளித்த பேட்டி ஒன்றில்," விடுதலை படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடி உள்ளதாகவும்,அவருக்கு இசைஞானி இளையராஜா 4 மணி நேரம் சொல்லிக் கொடுத்ததாகவும் " கூறியுள்ளார். இத்தகவல் அறிந்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisment

actor dhanush
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe