dhanush

திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2019-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் நடிகர் தனுஷிற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், தேசிய விருது வென்றது குறித்து நடிகர் தனுஷ் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருது வெல்ல வேண்டும் என்பது கனவு. இரண்டு விருது வென்றது என்பது ஒரு வகையான ஆசீர்வாதமே. இவ்வளவு தூரம் பயணித்து வருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும், அந்த நீண்ட அறிக்கையில் வெற்றிமாறன், மஞ்சு வாரியார், தயாரிப்பாளர் தாணு, ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்துள்ளார்.