Advertisment

மாஸ்டர் ரிலீஸ் குறித்து நடிகர் தனுஷ் ட்வீட்!

dhanush

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்டாலும், கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் தனுஷ் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "மாஸ்டர் படம் 13-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சினிமா விரும்பிகளுக்கு இது சிறப்பான செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து படம் பார்ப்பது திரையரங்கு கலாச்சாரத்தை மீண்டும் செழித்தோங்க உதவுமென்றுநம்புகிறேன். திரையரங்கு அனுபவத்திற்கு ஏதும் ஈடாகாது. அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, படத்தைத் திரையரங்கில் பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actor dhanush
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe