Actor Chiranjeevi assists in fan cancer treatment

Advertisment

தெலுங்கு திரையுலகில் உச்சபட்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி தற்போது இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் 'காட்ஃபாதர்' படத்தில்நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'லூசிஃபர்'படத்தின் தெலுங்கு ரீமேக்காகஇப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கட் என்ற ரசிகர் நடிகர் சிரஞ்சீவியைசந்தித்து, தனக்கு புற்றுநோய் இருப்பது குறித்தும், சிகிச்சைக்கு போதுமான வசதிகள் இல்லை எனக் கூறியுள்ளார். இதை கேட்ட சிரஞ்சீவி, அவருக்கு உதவ முன்வந்துள்ளார். மேலும் வெங்கட்டின் மருத்துவ அறிக்கையை வாங்கி பார்த்த சிரஞ்சீவி, அவரை தனியார் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளுமாறுஅறிவுறுத்தியுள்ளார். அத்துடன் வெங்கட்டின் உடனடிமருத்துவ சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து வெங்கட்டின் உடல்நிலை குறித்து தனக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கும்படி சிரஞ்சீவி அலுவலர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கட்," சிரஞ்சீவிரசிகர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவருக்கு நன்றி சொல்ல இந்த ஜென்மம் போதாது" எனத்தெரிவித்துள்ளார். சீரஞ்சீவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.