gvshdhd

Advertisment

நடிகர் விவேக் மற்றும் இயக்குனர் தாமிரா ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபலங்களும், ரசிகர்களும் இவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ‘தெறி’, ‘மாரி’, ‘மனிதன்’, ‘நட்பே துணை’, ‘கத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான பழம்பெரும் நடிகர் செல்லத்துரை நேற்று (29.04.2021) மாலை திடீரெனெ காலமானார். அவருக்கு வயது 84. சென்னையில் வசித்து வந்து நடிகர் செல்லத்துரை திடீர் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதிற்கிடையே இயக்குநர் கே.வி ஆனந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் காலமானார். இது திரையுலகினர் மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.