actor Chakravarthy passed away

Advertisment

தமிழ் திரையுலகில் 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சக்கரவர்த்தி(62) உயிரிழந்துள்ளார். இவர் 80 களில் சிவாஜி, ரஜினி, கமல், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து விலகிய சக்கரவர்த்தி தனியார் தொலைக்காட்சிஒன்றில் பின்னணியில் குரல் கொடுக்கும் கலைஞராக பணியாற்றி வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் இவர் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சக்கரவர்த்தி இன்று (23.4.2022) காலை மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் மரணமடைந்துள்ளார். இவரின்மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் சக்கரவர்த்தியின் மறைவுக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.