actor bonda mani admitted hospital

Advertisment

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டா மணி. இலங்கை சேர்ந்த இவர் சினிமாவிற்காக கேதீஸ்வரன் என்ற பெயரை போண்டா மணி என மாற்றிக்கொண்டார். சுந்தரா டிராவல்ஸ், வின்னர், படிக்காதவன், மருதமலை, ஜில்லா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இதய பிரச்னை காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடிகர் போண்டா மணிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் போண்டா மணி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.