Advertisment

சூர்யா பட நடிகர் கரோனாவால் பலி!

Bikramjeet Kanwarpal

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த பிரபல இந்தி நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவர், தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பிக்ரம்ஜித் கன்வர்பால் மறைவிற்கு பாலிவுட் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

Bollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe