“அவரது உயிரை காப்பாற்றுங்கள் ப்ளீஸ்...” - கண்ணீர் வடிக்கும் சக நடிகர்

Actor Benjamin request help treatment Bondamani

இலங்கையை பூர்வீகமாக கொண்ட போண்டாமணி கடந்த 1991 ஆம்ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான பவுன் பவுன்தான் என்ற படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சில படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் போண்டாமணி கடந்த மாதம் இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், போண்டாமணிக்குஇரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகசக நகைச்சுவைநடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "அண்ணன் போண்டாமணிக்குஇரண்டுசிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது. அவர் தற்போது மருத்துவமனையில்தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இந்த காணொளியை பார்த்தவர்கள் யாராவது அவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இலங்கையில் இருந்து நாடுவிட்டு நாடு வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து சினிமா நடிகராகி, எவ்வளவோ போராட்டங்களுக்கு மத்தியில் கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைகளைபெற்று நல்லபடியாக வளர்த்து வருகிறார். தயவு செய்து அவரை காப்பாற்றுங்கள். உங்களுக்கு தெரிஞ்ச அரசியல் தலைவர்களிடமோ, அல்லது நண்பர்களிடமோகூறி அவரின் உயிரை காப்பாற்றுங்கள். இலங்கையில் இருந்து அனாதையாக இங்கு வந்த போண்டாமணியைஅனாதையாக போகவிட்டுடாதீங்க, தயவுசெய்து உதவி செய்யுங்கள்.. ப்ளீஸ்" என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

bonda mani tamil actor
இதையும் படியுங்கள்
Subscribe