/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/348_9.jpg)
வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரம் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பெஞ்சமின். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான மெய்ப்படச் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் சொகுசு காரில் சென்றுள்ளார். அவருடன் இன்னும் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்கு சென்று பயணிகளிடம் ஜூஸ் பாட்டில் வழங்கியுள்ளனர். அந்த ஜூஸ் பாட்டிலில் இயேசு புகைப்படம் மற்றும் ‘ஏழைகளுக்கு உதவுங்கள் எதிரிகளையும் நேசியுங்கள், இயேசு உங்களை ஆதரிப்பார்’ என்ற வாசம் இடம்பெற்றிருந்தது. இதே வாசகம் அவர்கள் வந்த சொகுசு காரிலும் இடம்பெற்றிருந்தது.
இந்த சூழலில் அவர்களை சுற்றி வளைத்த சிலர், ஏன் இயேசு படம் பொறித்த ஜூஸ் பாட்டில் கொடுக்குறீங்க? மதம் மாற்றம் செய்றீங்களா? என்று கேள்வி கேட்டனர். பின்பு இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்பு பெஞ்சமின் உள்ளிட்ட அந்த மூன்று பேரும் தாங்கள் வந்த சொகுசு காரில் திரும்பி சென்றுவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)