Advertisment

கரோனாவிற்கு தங்கை கணவரை பறிகொடுத்த பாலசரவணன்... ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்!

Bala Saravanan

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

Advertisment

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த நடிகர் பாலசரவணனின் தங்கை கணவர் மரணமடைந்தார். இத்தகவலை தன்னுடைய சமூகவலைதளப்பக்கத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ள பாலசரவணன், ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோளும் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பு நண்பர்களே... இன்று எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவுகூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். தயவுசெய்து முகக்கவசம் அணிவீர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

bala saravanan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe