actor Bala hospitalised due to liver issue

தமிழில் 'அன்பு', 'காதல் கிசு கிசு' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார். தமிழில் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மேலும் ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் நடித்திருந்தார். இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த நிலையில் நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கல்லீரல் தொடர்பான நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

பாலா நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் 'ஷஃபீகிண்டே சந்தோஷம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.