/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/305_23.jpg)
தமிழில் 'அன்பு', 'காதல் கிசு கிசு' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார். தமிழில் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மேலும் ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் நடித்திருந்தார். இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் பாலா இன்று நான்காவது முறையாக திருமணம் செய்துள்ளார். அவரது தாய்மாமன் மகள் கோகிலாவை கேரளாவின் எர்ணாகுளத்திலுள்ள கலூர் பாவகுளத்தில் மணமுடிந்தார். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய பாலா, “கோகிலா என்னுடைய உறவினர். இந்த திருமணத்தில் என் அம்மாவும் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவருக்கு வயது 74, தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரும் இதில் கலந்து கொண்டு எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என விரும்பினார்.
கோகிலா தனது இளமை பருவத்தில் இருந்து கொண்டிருந்த கனவை இந்த திருமணம் நிறைவேற்றியுள்ளது. அனைவரின் ஆசீர்வாதத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். கோகிலாவுக்கு மலையளம் பேசத் தெரியாது. அவர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். அதனால் கடந்த ஒரு வருடமாக எனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. எனது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆதரவு தேவை என்பதை உணர்ந்தேன். இப்போது என்னை நானே பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் பாலா முதலில் சந்தன சதாசிவ என்பரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து மூன்றாவது முறையாக டாக்டர் எலிசபத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திருமணம் பதிவு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது. சமீபத்தில் அம்ருதா சுரேஷ் விவாகரத்து நடைமுறைகளை மீறி தன்னை துன்புறுத்துவதாக புகார் அளித்த நிலையில் பாலா கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)