azeem

தமிழ் பிக்பாஸ் 4 போட்டி ஒளிபரப்பாகி வருகிறது. மூன்று சீஸனையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்.

Advertisment

இந்தப் போட்டியில் ஷிவானியுடன் ‘பகல் நிலவு’ சீரியலில் நடித்திருந்த நடிகர் அசீம் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக செல்ல இருப்பதாகவும் அதற்காக அவர் நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. சுச்சித்ரா வெளியாகும் வாரத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளராக அசீம் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளே நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை அவர் உள்ளே செல்லவில்லை.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் ஒரு உண்மையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் அம்மாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.