Advertisment

அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட நடிகர்! 

ansh bagri

'தில் தோ ஹாப்பி ஹை ஜி' என்னும் டிவி சீரியலில் நடித்து பிரபலமான வட இந்திய டிவி நடிகர் அன்ஷ் பக்ரி, வீட்டு வாசல் அருகே, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

குண்டர்களின்தாக்குதலால் பலத்தகாயமடைந்த நடிகர், பாஸ்சிம் விஹார் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரளித்துள்ளார்.

Advertisment

டெல்லியில் தனது இல்லத்தின் அருகே நடந்த தாக்குதல் குறித்து பேசியுள்ளவர். அதில், “இதற்கு காரணம் தனது வீட்டை கட்டிய கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர்தான் என்றும், தொடக்கத்திலிருந்தே அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார். வீட்டை கடந்த வருடமே கட்டி முடித்து தருவதாக வாக்கு கொடுத்தவர், அதை நிறைவேற்றவில்லை.

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மேலும் கூடுதலாக பணம் கேட்டார். ஆனால், முதலில் அவர் என்னிடம் 21 லட்சம் கேட்டிருந்தார். அப்போது நான் முன் தொகையாக 16 லட்சம் பணத்தை செலுத்திவிட்டேன். இதனால் பேலன்ஸ் தொகையை மட்டும்தான் செலுத்துவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். இதனால் எங்களுக்குள் விவாதம் ஏற்பட்டது. வேலையை முடிக்காமலேயே நிறுத்திக்கொண்டார். நான் மும்பையில் இருக்கும்போது, இங்கிருக்கும் எனது அம்மாவிடமும், தங்கையிடமும் மிரட்டியுள்ளார். இதன்பின் போலீஸில் புகாரளித்தேன்.

தற்போது நான் வீட்டைவிட்டு வெளியேறிய சமயம், என்னை 8 பேருக்கு மேல் சேர்ந்து தாக்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe