Advertisment

அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்... நடிகர் அதர்வா ட்வீட்!

atharva

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

Advertisment

இந்த நிலையில், சமீபத்தில் கரோனாதொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த நடிகர் அதர்வா, கரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கரோனா தொற்றிலிருந்து தான் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் தான் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe