"கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தேன்..." - நடிகர் அசோக் செல்வன் பதிவு!

Ashok Selvan

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. அப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தீனி'. அனி சசி இயக்க,நித்யா மேனன், ரீத்து வர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் அசோக் செல்வன் இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரித்து, பின் குறைத்தது குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "இது என் இதயத்திற்கு நெருக்கமான படம். அதிக அன்பும், உழைப்பும் போட்டு எடுத்த படம். செயற்கை ஒப்பனை கொஞ்சம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், 103 கிலோ எடையை எட்ட கூடுதலாக 25 கிலோ எடை கூடினேன். குறைக்க நினைத்தபோது கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தேன். இது மிகவும் விசேஷமான படம். உங்களின் அன்பும், ஆதரவும் இப்படத்திற்குத் தேவை. எல்லாவற்றையும் தாண்டி, இது என் உயிர் நண்பன் அனி ஐவி சசியின் இயக்கத்தில் முதல் படம். நித்யா மேனன், ரித்து வர்மா, ராஜேஷ் முருகேசன், திவாகர் மணி, நாசர் உள்ளிட்டவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe