தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவிற்கும் நடிகை சாயிஷாவிற்கும் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு, இருவரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவந்தனர்.
இந்த நிலையில், ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு நேற்று (23.07.2021) இரவு பெண் குழந்தை பிறந்தது. இத்தகவலை நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஆர்யாவிற்கு வாழ்த்துதெரிவித்தார். இதையடுத்து, திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனபலரும் ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு வாழ்த்துதெரிவித்துவருகின்றனர்.