Advertisment

கைதி, பிகில் பட நடிகர் மரணம்!

Arun Alexander

டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். 'அவதார்' உள்ளிட்ட பல பிரபலமான படங்களுக்கு டப்பிங் செய்துள்ள இவர், 2016-ம் ஆண்டு முதல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். இவர், 'மாநகரம்', 'கோலமாவு கோகிலா', 'பிகில்', 'கைதி' போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நேற்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து, அவரது மறைவிற்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe