உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்த நிலையில், 133 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டார் வார்ஸ் பட நடிகர் ஆண்ட்ரூ ஜேக் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 76. லண்டனில் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்த ஜேக், சினிமாவில் வசனங்களை பேசவைக்கும் டயலாக் கோச்சாக பணிபுரிந்தவர். பேட்மேன் படத்தில் கிறிஸ்டியன் பேலுக்கு டயலாக் கோச்சாக இருந்திருக்கிறார். தற்போது ராபர்ட் பேட்டின்ஸன் நடிப்பில் உருவாகும் பேட்மேன் படத்திற்கும் இவர்தான் டயலாக் கோச்.
ஸ்டார் வார்ஸ்: எபிஸோட் 7, ஸ்டார் வார்ஸ்: எபிஸோட் 8 மற்றும் ஸோலோ உள்ளிட்ட படங்களில் ஜெனரல் எமாட் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் ஜேக் என்பது குறிப்பிடத்தக்கது.