Skip to main content

"நடிப்பு பேஷன்... மருத்துவம் புரொஃபஷன்" மறைந்த நடிகர் சேதுவின் மறுபக்கம்!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020


கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சேது. சந்தானம், பவர் ஸ்டார் உடன் இணைந்து காமெடியில் புகுந்து கலக்கி இருப்பார். 36 வயதான அவர், நேற்று இரவு மாரடைப்பபால் மரணமடைந்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஆரம்பித்த அவருடைய திரைப்பயணம் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்தது. அவர் நடிகரையும் தாண்டி தோல் மருத்துவரும் கூட. சென்னையில் முக்கியமான இடங்களில் அவர் தன்னுடைய மருத்துவ மனைகளை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளாக நடிப்பை நிறுத்திவிட்டு, தன்னுடைய மருத்துவ துறையில் தீவிர கவனம் செலுத்தினார். இவர் கடந்த 2016ம் ஆண்டு உமையாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவருக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவருடைய மரணம் பேரதிர்ச்சியை கொடுப்பதாக திரைத்துறையினர் வருத்தத்தோடு தெரிவித்துள்ளனர். 

 

ப



ஒரே நேரத்தில் இரண்டு துறைகளில் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து பேசி வந்தார். எப்போதும் சுவாரசியமாக பேசும் ஆற்றல் உள்ள அவர், தன் சினிமா அனுபவத்தையும், மருத்துவ பணியை பற்றியும் அவர் கூறும்போது, " ஒரே நேரத்தில் இரண்டு துறைகளில் நிச்சயம் எல்லோராலும் சாதிக்க முடியும். என் நண்பர் அமெரிக்காவில் நியூராலஜிஸ்ட். அவர் நீச்சல் போட்டிகளில் கோல்ட் மெடலிஸ்ட். இரண்டு துறைகளில் சாதிக்க முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம்.  எனக்கு நடிப்பு பேஷன். மருத்துவம் எனக்கு புரோஃபஷன். இரண்டையும் குழப்பிக்கொள்ள மாட்டேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பு மேலே ஒரே ஆசையாக இருந்தது. மத்த அம்மா அப்பாவா இருந்தா ஒழுங்கா படி அப்படினு சொல்லி இருப்பாங்க.

எங்க வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்தார்கள். அப்படி பண்ணுனது தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம். அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு நடிப்பு சரியா வரல. சந்தானம் தான் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார். படமும் நல்லா போச்சு. பிறகு பண்ணிய படம்தான் வாலிப ராஜா. சந்தானம் காமெடியானா நடிச்ச கடைசி படம் அதுதான். அந்த படமும் வெளிவர ரொம்ப வருஷம் ஆச்சி. படமும் சரியா போகல. அப்புறம் தீவிர யோசனைக்கு பிறகுதான் மருத்துவத்தை முழு நேர வேலையா செய்யலாம்னு தோன்றியது. நானும் அப்படியே செய்தேன். இந்னைக்கு நான் 60 பேருக்கு சம்பளம் கொடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்கேன்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்