actor and director Sudheer Varma passed away

Advertisment

தெலுங்கு திரையுலகில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'சுவாமி ரா ரா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்சுதீர் வர்மா. தொடர்ந்து நிகில் சித்தார்த், பிரபல நடிகரானநாகசைதன்யா உள்ளிட்ட பல பிரபலங்களைவைத்து படம் இயக்கி வந்த நிலையில், சில படங்களில்நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் முன்னணி நடிகரான ரவிதேஜாவை வைத்து ராவணாசுராஎன்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கிவந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் மற்றும் நடிகரானசுதீர் வர்மா காலமாகியுள்ளார். சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சுதீர் வர்மா விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாகத்தகவல் வெளியாகியுள்ளது.சுதீர் வர்மாவுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.இவரதுமறைவு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரதுமறைவு தொடர்பாக நடிகர்சுதாகர் கோமகுல, "சுதீர்மிகவும் அழகான மற்றும் அன்பான மனிதர். உங்களைஅறிந்ததும் உங்களுடன் பணியாற்றியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சகோதரா. நீங்கள் இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை." எனக் குறிப்பிட்டுள்ளார். இது போன்றுபலரும்தங்களது இரங்கல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.