actor Aman Dhaliwal incident in US gym

பஞ்சாபி நடிகரான அமன் தலிவால்ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், அவரைஅடையாளம் தெரியாத நபர் ஒருவர்கத்தியைக் காட்டி மிரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளார்அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கையில் கத்தியுடன் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி உள்ளார்.

Advertisment

பின்பு திடீரென அந்த நபர் நடிகர் அமன் தலிவாலை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அமன் தலிவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.