Advertisment

புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல்!

actor ajithkumar mourns puneeth rajkumars death

Advertisment

கன்னட சினிமாவின்முன்னணி நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

பெங்களூரில் வசித்து வந்த அவருக்குஇன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புனித் ராஜ்குமார்அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின்இறப்பு இந்தியத்திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின்மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் அஜித் குமார் புனித் ராஜ்குமாரின்மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித் ராஜ்குமாரின்துரதிர்ஷ்டவசமான மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும், இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வலிமையை பெறட்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

puneeth rajkumar ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe