Advertisment

மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித்... வைரலாகும் வீடியோ!

ajith kumar

Advertisment

'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்திலேயே 'வலிமை' என்றொரு படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதமே ஹைதரபாத்தில் தொடங்கப்பட்டது.

ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அஜித்திற்கு பைக் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு கொஞ்ச நாட்களுக்கு ஷூட்டிங் முடங்கியது. இதன்பின் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் ட்விட்டரில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் மருத்துவமனைக்குச் செல்வதுபோன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது போன்ற எந்தவிதத் தகவலும் வெளியாகவில்லை. நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் முகக்கவசம் அணிந்திருக்கின்றனர். அதேபோல அங்கு அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அமர்ந்திருக்கின்றனர். இதனால் இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ajith kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe