கார்கில் போர் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை

Actor AjithKumar at Kargil war memorial

'வலிமை' படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே அஜித் சில நண்பர்களுடன் பைக்கில் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து அவருடன் பயணம் செய்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மஞ்சு வாரியர், "சூப்பர் ஸ்டார் அஜித் உங்களுக்கு எனது நன்றி" என பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில்லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ACTOR AJITHKUMAR AK61 kargil war
இதையும் படியுங்கள்
Subscribe