நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.

ajithkumar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னையில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது நடிகர் அஜித் பைக் ஸ்டண்ட் காட்சிக்காக பயிற்சியில் இருந்தபோது விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவாதகவும் தகவல் பரவின.

சிகிச்சை முடிந்தவுடன் நடிகர் அஜித் மார்ச் மாதத்தில் வலிமை படத்திற்கான ஷூட்டிங்கில் பங்குபெறுவார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜித் தனது உதவியாளர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்றார் என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

வைரலாகும் இந்த வீடியோவில்அஜித்தினுடைய கெட்டப்பை பார்த்தால்‘பில்லா 2’பட லுக்கில் இருக்கிறார். ஒருவேளை வலிமை படத்தில் இந்த லுக்கில்தான் அஜித் நடிக்கிறாரோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர். ஷூட்டிங் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை வலிமை படம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றது படக்குழு.