90களில் சாக்லேட் பாயாவ வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு கதி இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படம் மூலம் அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து ‘வி.ஐ.பி’, ‘பூச்சுடவா’, ‘படையப்பா’, ‘சுயம்வரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானார். கடைசியாக தமிழில் 2014ஆம் ஆண்டு வெளியான ‘ராமானுஜன்’ படத்தில் நடித்திருந்தர். அதன் பிறகு போதிய வாய்ப்பில்லாமல் நியூசிலாந்து சென்று செட்டிலானார். அங்கு சினிமா அல்லாது வேறொரு பணியை செய்து வந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கவுரி பிரியா, கதாநாயகியாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படம் மூலம் பத்து வருடங்களுக்கு மேலான பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கிறார் அப்பாஸ். அதனால் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் நகைச்சுவை கலந்த ஒரு குடும்ப பொழுது போக்கு படமாக இப்படம் உருவாகி வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.