aari

நடிகர் ஆரி நடிப்பில், காளிங்கன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பகவான்'. இப்படத்தை அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment

நடிகர் ஆரி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். எனவே, அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து திரும்பியவுடன் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற உள்ளது. மேலும், இப்படமானது தமிழில் வெளியாகும் முதல் இலுமினாட்டி படம் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment