Advertisment

இனிமேல் என் பேரு ஆரி இல்லை... பெயரை மாற்றிய நடிகர்!

ரெட்டச்சுழி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆரி. இவர் இந்த படத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானார். இதன் பின் தரணி, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

aari

பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தாவுடன் ஜோடி சேர்ந்து அலேகா என்னும் படத்தில் நடித்து வருகிறார். மேலும், எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான், மௌனவலை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020 ஆம் ஆண்டு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் பல சமூக அக்கறைக் கொண்ட விஷயங்களிலும் செயல்படுகிறார். இந்நிலையில் ஆரி என்று பலராலும் அறியப்பட்டு வந்தவர் தனது பெயரை ஆரி அருஜூனா என மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜூனா என மாற்றியுள்ளேன். இனி வரும் காலங்களில் ஆரி அருஜூனா என்று என்னை அழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

aari aishwarya dutta
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe