/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/544_2.jpg)
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2009-ல் வெளியான 'ஈரம்' படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதி. 'யாகாவாராயினும் நாகாக்க', மரகத நாணயம்', படங்களில் இணைந்து நடித்த நடிகை நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து. இதனைத் தொடர்ந்து காதலித்து வந்த இருவருக்கும் கடந்த மார்ச்மாதம் நிச்சயம் நடந்தது.
இந்நிலையில் ஆதி நிக்கி கல்ராணி இருவருக்கும் வரும் 18 ஆம் தேதி திருமணம் சென்னையில்நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஏ.கே 61 படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கும் அஜித்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானதுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)