சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ஆக்‌ஷன். இதில் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, தமன்னா உள்ளிட்டோர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். சுந்தர். சி படம் என்றாலே காமெடி குறைவு இருக்காது. ஆனால், இந்த முறை காமெடி இல்லாமல் முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் ஒரு ஆக்‌ஷன் படத்துடன் வருகிறேன் என்று மேடைகளில் பேசி வந்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisment

action movie

இந்நிலையில் கருத்துக்களை பதிவுசெய் என்னும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், கே.ராஜன் உள்ளிட்ட சினிமாத்துறையின் மூத்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கி பேசினார்.

அதில், “ ஆக்‌ஷன் படம் 16 கோடி நஷ்டம் என்றும், அயோக்யா படம் 9 கோடி ரூபாய் நஷ்டம் என்றும், பல தயாரிப்பாளர்களை விஷால் காலி பண்ணிட்டார்” என்று பேசியுள்ளார்.