Advertisment

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் அக்‌ஷரா ஹாசன் படம் 

Achcham Madam Naanam Payirppu film Direct OTT release march25

கமல்ஹாசனின்இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன்அஜித் நடித்த விவேகம், விக்ரமின் கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கும் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தில் அக்‌ஷராஹாசன் முதன்மைகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தில், மால்குடி சுபா, உஷா உதூப், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படத்தின் ட்ரைலர்நேற்று(21.3.2022)வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவெளியிட்டுள்ளது. அதன்படி 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படம்' நேரடியாக அமேசான் ப்ரைமில் வரும் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளி வருவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Advertisment

tamil cinema akshara haasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe