பிரபல மலையாள இயக்குனர் ஜான் ஆபிரகாமின் அக்ரஹாரத்தில் கழுதை படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ராமச்சந்திர பாபு காலமானார்.

Advertisment

babu

இவர் 1947ஆம் ஆண்டு சென்னை மதுராந்தகத்தில் பிறந்து, லயோலா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, பின்னர் புனே திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்றார். இதன்பின்னர் சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

Advertisment

தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும், மணிரத்னத்தின் பகல் நிலவு உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் 21ஆம் தேதி அன்று கோழிக்கோடு அருகே ஷூட்டிங்கிற்கு லொக்கேஷன் பார்ப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார் ராமச்சந்திர பாபு. உடனடியாக அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மறைந்த ராமச்சந்திர பாபு, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment